வேலூரில் மாநகராட்சி சார்பில் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினால், லாரிகளை பொதுமக்கள் சிறை பிடியுங்கள் என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காட்பாடி கழிஞ்சூர் ஏரியை சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், நீர்நிலைகளில் யார் குப்பை கொட்டினாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.