தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் இன்று காலை உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளைக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று பின்னர் புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த புயல் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் 8 ஆம் தேதி காலை கரையை நெருங்கும் என கணிக்கப்படுவதாகவும், புயலாக உருவானால் ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த மாண்டஸ் என்ற பெயரிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக 7 ஆம் தேதி இரவில் தமிழ்நாடு, புதுவை பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பும், 8 ஆம் தேதி மழை படிப்படியாக அதிகரித்து கனமழை முதல் மிக கனமழையாக பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.