திருப்பூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒன்றரை லட்சம் நோயாளிகளின் தனிப்பட்ட தரவுகளை ஹேக்கர்கள் திருடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நோயாளிகளின் தனிப்பட்ட தரவுகளான பெயர்கள், முகவரி, பிறந்த தேதி, மருத்துவ விபரங்கள் உள்ளிட்டவற்றை 3-ஆம் தரப்பு நபரிடம் இருந்து ஹேக்கர்கள் திருடி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை, முதலில் CloudSEK என்ற அமைப்பு கண்டுபிடித்துள்ளது.
இதுதொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.