கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று டெல்டா மாவட்டங்கள் உட்பட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழையும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ள வானிலை மையம், நாளை முதல் 7ம் தேதி வரை அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் டிச.5ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இது மண்டலமாக வலுப்பெற்று டிச.8ம் தேதி வட தமிழக கடலோர பகுதிகளில் நிலவக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.