திருவள்ளூர் மாவட்டம் மாளந்தூரில், நூறு நாள் பணியின் போது மண்ணில் புதைந்திருந்த பழமையான ராக்கெட் குண்டு கண்டெடுக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் நடந்த பணியின்போது, சுமார் ஒன்றரை அடி நீள ராக்கெட் குண்டு கண்டெடுக்கப்பட்டது.
இதனையடுத்து, சென்னையில் இருந்து சென்ற வெடிகுண்டு நிபுணர்கள், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் அப்பகுதியில் சோதனை நடத்தினர். மேலும், ராக்கெட் குண்டு ஆய்வு செய்யப்பட்டு, தனியார் தொழிற்சாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.