சென்னையை அடுத்த புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதிக்கு, நெஞ்சு வலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
கடந்த 25-ம் தேதி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான சாகுல் மீரானிடம், இன்று காலை போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவர் நெஞ்சு வலிப்பதாக கூறி, மயங்கியதாக சொல்லப்படுகிறது.
மயக்கம் தெளிந்தபின், அவருக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டதையடுத்து, போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றதாக கூறப்படுகிறது.