தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் டிசம்பர் 5ம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ம் தேதி வாக்கில் தமிழக கடலோரப் பகுதிகளின் அருகில் நிலவக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ள வானிலை மையம், வரும் 4,5ம் தேதிகளில் மீனவர்கள் அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.