செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

எழுந்திரு லட்சு.. எழுந்திரு.. கண்ணீர் மல்க கரிணிக்கு விடை கொடுத்த பக்தர்கள்..!

Dec 01, 2022 07:20:31 AM

புதுச்சேரி மக்களின் செல்லப்பிள்ளையான மணக்குள விநாயகர் கோவிலின் யானை லட்சுமி நடைப்பயிற்சி சென்ற போது கீழே விழுந்து உயிரிழந்தது. அதிசய தந்தம் கொண்ட கரிணிக்கு கண்ணீர் மல்க பக்தர்கள் விடை கொடுத்தனர்.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு திருவணந்தபுரத்தில் இருந்து 1996 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தந்தங்களுடன் கூடிய அதிசய பெண் யானைக்குட்டி லட்சுமி..!

ஆலயத்தை வலம் வந்த பக்தர்கள்  விநாயகரின் அவதாரமாக அந்த வடவையை வணங்கி மகிழ்ந்தனர். யானைக்கு சவருடன் கூடிய குளியலறை அமைத்துக்கொடுக்கப்பட்டது. 

குழந்தைகளுடன் ஜாலியாக விளையாடும் அந்த அதவையின் கால்களுக்கு வெள்ளியில் கொலுசுகளும், தங்க டாலருடன் கூடிய சங்கிலியும் அணிவித்து அழகு பார்த்தனர் பக்தர்கள்.

வயது 32 ஐ கடந்த நிலையில் விழா நாட்களிலும், முக்கிய நாட்களிலும் அலங்காரத்துடன் புதுச்சேரி வீதியை வலம் வந்த லட்சுவுக்கு புதன்கிழமை காலை இப்படி விடிந்திருக்க வேண்டாம்..!

வழக்கம் போல பாகனுடன் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் நடைப்பயிற்சிக்கு  சென்ற யானை லட்சுமி திடீரென மயங்கிச்சரிந்தது. உடன் சென்ற பாகன் பதட்டமடைந்தார்.

கால் நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து லட்சுமியை எழுந்திருக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்று போனதால், யானை பாகன் மட்டுமல்ல நூற்றுகணக்கான பக்தர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

மாரடைப்பு காரணமாக யானை உயிரிழந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர் உயிரிழந்த லட்சுமி யானையின் உடலுக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், முதல் அமைச்சர் ரங்கசாமி , அமைச்சர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலிக்கு பின்னர் கிரேனில் தூக்கிச்சென்று இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டது. உடற்கூறாய்வு  நிறைவு பெற்றதையடுத்து லட்சுமி யானை கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement