திருப்போரூர் அருகே உப்பளம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 5 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்படுத்தாமல் இருப்பதால் சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையத்தை அங்கு அமைக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது வேதனையாக உள்ளது என்றார்.
மேலும், தமிழ்நாட்டில் போதை பொருள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதால், முதலமைச்சர் மாதந்தோறும் ஆய்வு கூட்டம் நடத்தி தவறு செய்யும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.