கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு, சுவாதி என்பவரை காதலித்ததற்காக கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்டு உடல் நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரெயில் தண்டவாளத்தில் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் கைதான யுவராஜ் உள்பட 10 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
விசாரணையின்போது, ஏற்கனவே மாஜிஸ்திரேட் முன் கொடுத்த வாக்குமூலத்தை மாற்றி, சிசிடிவி பதிவில் கோகுல்ராஜுடன் இருப்பது தான் அல்ல என சுவாதி தொடர்ந்து கூறிவந்தார்.
சத்திய பிரமாணத்தை மீறி பொய்யான வாக்குமூலம் அளித்ததால் சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. உண்மையை கூற அவருக்கு 2 வார அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.