கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காயபோட்டிருந்த துணியை அசை கம்பியில் இருந்து எடுத்த போது பெண் மின்சாரம் தாக்கி பலியானார்.
வன்னியர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ரங்கநாதன் - கிருஷ்ணவேணி தம்பதியினர். ரங்கநாதன் சபரிமலைக்கு மாலை அணிந்துள்ளதால், திங்கட்கிழமை அதிகாலை குளிக்கச்சென்றுள்ளார்.
அப்போது அசை கம்பியில் காயப்போட்டிருந்த துணியை எடுத்த போது கிருஷ்ணவேணி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
வீட்டிற்கு வரும் மின் இணைப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த இந்த இரும்பு ராடில் மின்கசிவு ஏற்பட்டு, அது அசை கம்பியால் பாய்ந்து கிருஷ்ணவேணியை தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்