கூகுள் மேப்பை பார்த்தவாறு காரை ஓட்டிய நபர் மேப் காட்டிய வழியை சரியாக புரிந்து கொள்ளாமல் கழிவுநீர் வாய்க்காலில் காரை இறக்கிய நிலையில் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கார் மீட்கப்பட்டது.
சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் குடும்பத்தினருடன் திருக்கோவிலூர் அருகே உள்ள கீழையூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஸ்ரீ ஞானானந்தகிரி தபோவனம் தபோவனம் மடத்திற்கு செல்வதற்காக கூகுள் மேப்பில் வழி தேடியுள்ளார்.
கூகுள் மேப் காட்டிய வழியை புரிந்து கொள்ளாமல் தென்பெண்ணை ஆற்றுக்கு செல்லும் குறுகிய பாதையில் மேப்பை பார்த்தவாறு சென்றபோது எதிர்பாராமல் சாலையில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் கார் இறங்கியுள்ளது.