மதுரை மத்திய சிறையில், கைதிகள், உறவினர்கள் சந்திப்பின் போது, இடையூறின்றி எளிதாக பேசும் வகையில், இன்டர்காம் வசதியை சிறைத்துறை அறிமுகம் செய்துள்ளது.
மத்திய சிறையில், வார வேலை நாட்களில் கைதிகளை, உறவினர்கள் சந்தித்து பேச அனுமதிக்கப்படுவர்.
கைதிகளுக்கும், உறவினர்களுக்கும் இடையே இரண்டு மீட்டர் இடைவெளி உள்ளதால், வயதான கைதிகளும், உறவினர்களும் பேசுவதை புரிந்து கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், உரக்க கத்தி பேச வேண்டியிருந்த நிலையில், அதனை தவிர்க்க சிறைக்குள் இரு பக்கத்திலும் இன்டர்காம் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.