விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே விபத்தில் உயிரிழந்த இளைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவரது நண்பர்கள் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
என்.முக்குலம் கிராமத்தை சார்ந்த சரவணசாத்தார் என்ற இளைஞர், கடந்த ஆண்டு இருசக்கர வாகன விபத்தின் போது தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய நண்பர்கள், கிராமமக்கள் மற்றும் நரிக்குடி காவல் துறையுடன் இணைந்து ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.