கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குடிநீர் தேக்க தொட்டியின் இரும்பு பைப் உடைந்து அதிக தண்ணீர் வீணான நிலையில், நகராட்சி ஊழியர்கள் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காட்டுக்கூடலூர் சாலையில் உள்ள தினசரி மார்க்கெட் வளாகத்தில் உள்ள குடிநீர்த்தேக்க தொட்டி மூலம், புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நீர்த்தேக்க தொட்டியை திறக்க முற்பட்ட போது, ஏற்பட்ட பழுதின் காரணமாக பைப் உடைந்து, மார்க்கெட் வளாகம் மற்றும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.