கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், உரக்கடை உரிமையாளர் தற்கொலை விவகாரத்தில், வாட்ஸ் அப் ஆடியோ அடிப்படையில், சிவாயம் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கைது செய்யப்பட்டார்.
வாண்டையாம் பள்ளத்தை சேர்ந்த கணேஷ், சிதம்பரத்தில் உரக்கடை நடத்தி வந்த நிலையில், கடந்த 24-ம் தேதி தனது, மனைவி, மகன் மற்றும் மகளுக்கு திராட்சை ரசத்தில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து விட்டு, அடுத்த நாள் காலையில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரின், குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கணேஷ் தனது நண்பர் அக்பர் அலி என்பவருக்கு அனுப்பி இருந்த வாட்ஸ் அப் ஆடியோவில், சிவாயம் ஊராட்சிமன்ற தலைவியின் கணவர் செங்குட்டுவன் உள்ளிட்ட 7 பேர் தான் தற்கொலைக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
இவர்கள் தொழில் ரீதியான நண்பர்கள் என்பதும், செங்குட்டுவன் பெற்ற 20 லட்ச ரூபாய் பணத்திற்கு கணேஷ் ஜாமீன் கைழுத்திட்டதும், அவர் கடனை திருப்பி செலுத்தாததால் கணேஷ் கடன் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
செங்குட்டுவனை கைது செய்த போலீசார், மற்ற 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.