இலவச மகளிர் பேருந்து பயணத்திட்டம் மூலமாக மாதம் ஒன்றுக்கு பெண் பயணிகள் சராசரியாக 888 ரூபாய் சேமிக்கின்றனர் என்று மாநில திட்டக்குழுவின் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
அரசு பேருந்துகளில் மகளிர் இலவச பயணத் திட்டத்தின் பலன்கள் எந்த அளவுக்கு பெண்களை சென்றடைந்திருக்கிறது என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நாகப்பட்டினம், மதுரை, திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் சென்னையிலும் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை முதலமைச்சரிடம் சமர்பிக்கப்பட்டது.
அதில் பல்வேறு வகையான பணிக்கு செல்லக்கூடிய பெண்கள் மாதம் 756 ரூபாயிலிருந்து 1012 ரூபாய் வரையிலும் சேமிக்க முடிவதாகவும், இந்த தொகையினை குடும்பத்தின் அத்தியாவசிய தேவைக்கு பெண்கள் பயன்படுத்துவதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.