மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாம் என, அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் மின் கட்டணம் செலுத்த முடியாது என மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், மின் கட்டணம் செலுத்துவதில் பலருக்கு சிரமங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவையில் பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் மீட்டர் எண்ணுடன் ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்றும், அதற்காக விரைவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.