நாகை மாவட்டம் வேளாக்கண்ணி அருகே பூட்டை உடைத்து வீட்டுக்குள் கொள்ளையடிக்க புகுந்த மர்ம நபர்கள், எதிர்பார்த்தது போல அதிக பணம் மற்றும் பொருள்கள் இல்லாததால், வெளியே உள்ள தூணில் நோ என எழுதி சென்றுள்ளனர்.
திருப்பூண்டி ஆசாத் நகரை சேர்ந்த ஜியாவ்தீன் - சமீமா தம்பதியினர் தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பினர்.
அப்போது, பூட்டு உடைக்கப்பட்டு அறைக்குள் இருந்த பொருள்கள் சிதறி கிடந்ததையும், 5 ஆயிரம் ரூபாய் திருட்டு போயிருப்பதோடு, தூணில் நோ என எழுதியிருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.