சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மதுபாட்டிலுடன் போதையில் பள்ளிக்கு வந்த அரசுப்பள்ளி மாணவர்கள் 5 பேரை ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 19ஆம் தேதி வகுப்பறைக்கு மதுபாட்டிலுடன், மதுபோதையில் வந்த மாணவர்கள் 5 பேர், ஆசிரியர்களிடம் தகராறு செய்துள்ளனர். இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்களின் பெற்றோரைஅழைத்து சொன்னதோடு, மாணவர்களையும் இனி இதுபோல் செய்யக்கூடாது என்றும் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளார்.
மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் வழியில் இருக்கும் அரசு டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.