கோயம்புத்தூர் மாவட்டம் ஆலந்துறை அருகே பழங்குடி கிராமத்தில் நூற்றாண்டு பழமையான கருப்பராய சுவாமி கற்சிலையை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நல்லூர்வயல் சுற்றுவட்டார ஏழு கிராம மக்களின் குலதெய்வமான சடையாண்டியப்பன் கோயிலில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஊர்மக்கள் விளக்கேற்ற சென்றுள்ளனர்.
அப்போது, அங்கிருந்த இரண்டரை அடி உயரமுள்ள கருப்பராயர் சுவாமி கற்சிலை மாயமாகி இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்து, போலீசில் தகவலளித்தனர்.