கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3ஆயிரத்து 750 கோழி குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்தன.
கல்லாவி அருகே வேடப்பட்டி இலுப்பமரகொட்டாய் பகுதியில் மாது என்பவர் 2 கோழி பண்ணை அமைத்து பராமரிப்பு செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நிலையில் ஒரு பண்ணையில் திடீர் மின் கசிவு ஏற்பட்டு தீ மள மள என பற்றி எரிந்தது. இந்த விபத்தில் அங்கிருந்த 3ஆயிரத்து 750 கோழிக்குஞ்சுகள் மீது தீ பற்றி முற்றிலும் கருகியது.
3750 கோழி குஞ்சுகள் தீயில் முற்றிலுமாக கருகினமுதல்கட்ட விசாரணையில், மின் இணைப்பு பெறப்பட்ட பகுதியில் தென்னை மரத்தின் ஓலை சிக்கி இருந்ததாகவும் அதனால் தீப்பற்றி இருக்கக்கூடும் என்றும் தெரிய வந்துள்ளது.