தமிழகத்தில், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கொடைக்கானலில் இன்று அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.
திருப்பூரில் இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் ஏற்பட்டதால் எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டது. இந்த பனிப்பொழிவு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நிலவியது.
கோயம்புத்தூரில் புறநகர் பகுதிகளான நஞ்சுண்டாபுரம், போத்தனூர் உள்ளிட்ட இடங்களில் பனிமூட்டத்தினால் சாலைகள் மறைக்கப்பட்ட நிலையில் வாகன ஓட்டிகள் முகப்புவிளக்கை எரியவிட்டபடி வாகனங்களை மெதுவாக ஓட்டிச்சென்றனர்.
மலைப்பிரதேசமான கொடைக்கானலில் முன்கூட்டியே துவங்கிய உறைபனியால் கடும் குளிர் நிலவுகிறது.
பசும்புற்களின் மேல் படர்ந்துள்ள உறைபனியும், ஏரியிலிருந்து உறைபனி புகைபோல் செல்வதும் ரம்மியமாக காட்சியளிக்கிறது. கடும்குளிரினால் மக்கள் நெருப்புமூட்டி குளிர்காய்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிப்பொழிவினால் நீர்நிலைகள், புல்வெளிகள் மற்றும் வாகனங்கள் மீது பனி படர்ந்து காணப்பட்டது. தற்போதே பனி அதிகரித்து வரும் நிலையில் வரும் நாட்களில் ஜீரோ டிகிரியை எட்ட வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.