நீலகிரி மாவட்டம் உதகையில் உரிமையாளர் செல்லும் பேருந்தை துரத்தி செல்லும் 3 வளர்ப்பு நாய்களின் பாச போராட்டம் குறித்த காட்சிகள் வெளியாகியுள்ளது.
உதகை காந்தல் பகுதியை சேர்ந்த ரவிக்குமார், 3 நாய்களை வளர்த்து வரும் நிலையில், மார்க்கெட் பகுதியில் தினக்கூலி வேலை செய்து வருகிறார்.
இவர் நாள்தோறும் பேருந்தில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். அப்போது, அவரது 3 வளர்ப்பு நாய்களும் எதையும் பொருட்படுத்தாமல் ஆறு கிலோமீட்டர் தூரம் பேருந்தின் பின் ஓடி சென்று ரவிக்குமார் வேலை செய்யும் இடத்திற்கு செல்கின்றன. இதனை வாகன ஓட்டிகள் வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.