கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் பொங்கல் பண்டிகைக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.
கோயம்பேட்டில் வீட்டுவசதித்துறை மூலம் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டபின் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.
இனி கட்டப்படும் வீடுகள் தனியாரைவிட சிறப்பான முறையில் கட்டப்படும் என்ற அமைச்சர் சென்னையில் உள்ள பெருநகர வளர்ச்சி குழும அலுவலகம் போன்று கோயம்புத்தூர் மற்றும் மதுரையிலும் தொடங்கும் பணி செயல்பாட்டில் உள்ளதாக தெரிவித்தார்.