நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட தீயினை 5 மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் கட்டுப்படுத்தினர்.
ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த வடிவேல், நூல் தயாரிப்பு தொழில் மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை பனியன் கழிவு அரவை இயந்திரத்தில் ஏற்பட்ட உராய்வால் திடீரென தீ பற்றியது.
தகவல் அறிந்து வந்த 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்தில் 50 டன் பஞ்சு மற்றும் இயந்திரம் உள்பட 4கோடி ரூபாய் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.