தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைகளை உறவினர்கள் பார்க்க வேண்டுமெனில் மருத்துவமனை ஊழியர்களுக்கு பணம் கொடுக்க வேண்டியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குழந்தைகளை பார்ப்பதற்காக உறவினர்கள் காலை முதல் மாலை வரையில் காத்திருக்க வைக்கப்படுவதாகவும், பணம் கொடுத்தால் குழந்தையை பார்க்க அனுமதிப்பதாகவும் குற்றம்சாட்டிய உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குழந்தை பெற்ற தாய்மார்களின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் , பணம் வசூலித்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் குழந்தைகளை பார்ப்பதற்கான நேரம் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.