திருவண்ணாமலை வந்தவாசியில், மதுபோதையில் பேருந்தில் இருந்து இறங்க மறுத்த நபரை, வேறு வழியின்றி நடத்துனர் கீழே தள்ளிவிட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
கடந்த 17ம் தேதி பெங்களூருவில் இருந்து வந்தவாசிக்கு திரும்பிய அரசு விரைவு பேருந்தில் பயணித்த நபர், மதுபோதையில் சக பயணிகளுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இரவு 11 மணியளவில் வந்தவாசி பேருந்து நிலையம் வந்தடைந்ததும், அனைத்து பயணிகளும் இறங்கிய நிலையில், அந்த நபர் மட்டும் இறங்காமல் அடம்பிடித்ததாக சொல்லப்படுகிறது.
பேருந்து பணிமனைக்கு செல்ல வேண்டிய நேரத்தில் தொல்லை கொடுத்ததால் ஆத்திரமடைந்த நடத்துனர் அந்த நபரை கீழே தள்ளிவிட்டு பேருந்தை எடுத்துச் சென்றதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.