வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் அடுத்த 3 நாட்களுக்குள் தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை ஒட்டி வரக்கூடும் என்பதால், இன்று முதல் வரும் 23ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்றும் நாளையும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழையும், வரும் 21, 22ம் தேதிகளில் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.