கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
2019 - 2020ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருதுகளை திரும்ப பெறக் கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள், கலைமாமணி விருது எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது? என கேள்வி எழுப்பியதோடு, விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டதாக கூறினர்.
மேலும், கலைத்துறையில் சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய விருது, தற்போது 2 படங்களில் நடித்துவிட்டால் அவர்களுக்கு விருது வழங்கலாம் என்ற நிலை உருவாகிவிட்டதாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா மற்றும் கலைத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.