தமிழ்நாடு அனைத்து வகை தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர், தொழிலாளர்களுக்கும், வேலை அளிப்பவர்களுக்கும் இடையே, தொழிலாளர் நலத்துறை பாலமாக செயல்படுவதாக கூறினார்.