தூத்துக்குடியில், சாலையில் நடந்து சென்ற இளைஞரை வழிமறித்து மொபைல் போனை பறித்து-எட்டி உதைத்து தாக்கிய பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகளை, சிசிவிடி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், ஜவுளிக்கடைகள் முன்பாக நின்றுகொண்டு வெளியே வரும் பொது மக்களை வலுக்கட்டாயமாக இழுத்து செல்போன் மற்றும் பணம் பறிக்கும் செயலில் திருநங்கைகள் தொடர்ந்து ஈடுபவதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், குற்ற செயலில் ஈடுபட்ட 10 திருநங்கைகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.