கணவன் - மனைவி இடையே தகராறு இருந்தாலும் பெற்ற தந்தையிடம் பிள்ளைகள் வளர்வது சட்டவிரோதம் ஆகாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
மதுரையை சேர்ந்த துர்கா என்பவர் தனது இரண்டு மைனர் குழந்தைகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்கக் கோரி ஆட்கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், தனது கணவர், எங்களது பிள்ளைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு விட மறுப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கில், கணவன் - மனைவி இடையே ஒரு வேளை பிரச்சனை இருந்தால், அதனை உரிய முறையில் குடும்ப நல நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ளுமாறு நீதிமன்றம், அறிவுறுத்தியுள்ளது.