திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே பட்டப்பகலில் செல்போனை பறித்துச் சென்ற இளைஞரை விரட்டி பிடித்து, தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திருச்சி கண்ட்ரோல் பகுதியைச் சேர்ந்த போஸ், சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த இளைஞர் ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில், போஸின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். போஸின் சத்தம் கேட்டு திருடனை விரட்டி பிடித்த பொதுமக்கள், அங்கிருந்த மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சியை சேர்ந்த விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.