அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்துக் கொள்வதை தவிர்த்து, மரியாதையுடனும் கனிவுடனும் நடந்துக்கொள்ள வேண்டுமென, போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க, அறிவுரைகளை வழங்கி, அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் கண்டிப்பாக பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச்செல்ல வேண்டுமென்றும், சாலை விதிகளை பின்பற்றி, பேருந்தை கவனமாக இயக்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து இயக்கத்தினை செம்மைப்படுத்தி வருவாயை அதிகரிக்குமாறும் போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.