ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வீட்டின் அறையின் உள்பக்கத்திலிருந்து தெரியாமல் தாழிட்டு சிக்கிக்கொண்ட ஒன்றரை வயது குழந்தையை, தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
சுவால்பேட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ்- சுகன்யா தம்பதியின் குழந்தை லக்சன், இன்று காலை படுக்கையறையினுள் சென்று தவறுதலாக கதவை தாழிட்டுக் கொண்டு அழுதது.
கணவர் வேலைக்கு சென்றிருந்த நிலையில், சுகன்யா கதவை திறக்க முயற்சித்தும் முடியாததால், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.