கல்வி நிறுவனங்களில் ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ராகிங் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தினர் நடவடிக்கைகள் மீது திருப்தி அடையாத பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் ராகிங் தடுப்பு குழு இருக்க வேண்டும் எனவும் டிஜிபி குறிப்பிட்டுள்ளார்.