கோயம்புத்தூர் மாவட்டத்தில், ஒரு வாரத்திற்குள் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்காவிட்டால் மிகப்பெரியளவில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படும் என, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
குனியமுத்தூரில், மழைநீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, சென்னையில் மழைநீர் வடிகால்கள் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.