சீர்காழியில் 36 மணி நேரத்தில் 2லட்சத்து 3ஆயிரம் மின் இணைப்புகள் சீரமைக்கப்பட்டு மீண்டும் மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கடந்த 11ஆம் தேதி சீர்காழி தாலுக்கா பகுதியில் பெய்த அதீத கன மழையால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, அதித மழையால் 312 மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 300 மின்கம்பங்கள் மாற்றப்பட்டு விட்டதாகவும் கூறினார்.