பல்வேறு புகார்களுக்கு உள்ளான திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிபதி ஜமுனாவை டிஸ்மிஸ் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மாதத்திற்கு முன்பு ஜமுனா நீதிபதியாக பணியாற்றிய போது அவர் மீது வழக்குகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், திருவண்ணாமலையில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு வந்த நிலையில், அதன் வழக்குகளை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதி ஜமுனா தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
புகார்களை விசாரித்த உயர்நீதிமன்றம், அதில் அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதை உறுதி செய்து பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.