மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 2 நாட்களாக பெய்த அதி கனமழையால் பல்வேறு கிராமங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. சுமார் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
வெள்ளம் பாதித்த சீர்காழி, சூரக்காடு, சட்டநாதபுரம், வெள்ளபள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 17 ஆயிரம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மழை பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் மெய்யநாதன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் இன்றிரவுக்குள் மின் விநியோகம் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.