விழுப்புரத்தில் துணிக்கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைக்கு பணம் கட்டுமாறு கூறி, துணிக்கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை, நகராட்சி ஊழியர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கடுமையாக தாக்கியதாக கூறப்படும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
திருச்சி செல்லும் சாலையில் துணிக்கடை நடத்திவரும் அஸ்வின் என்பவர், நகராட்சி ஆணையரிடம் அனுமதி பெற்று தனது கடைக்கு முன்பாக டிஜிட்டர் பேனர் வைத்துள்ளார்.
இந்நிலையில், நகராட்சியில் குப்பை ஏற்றிச் செல்லும் வாகனத்தின் ஓட்டுனர் அன்சர், தனது மகன் நாசர் மற்றும் சிலருடன் வந்து, யாரைக் கேட்டு பேனர் வைத்தாய் என்று கேள்வி எழுப்பியதுடன், பணம் கட்ட சொல்லி, கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களை கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.