நீலகிரி மாவட்டம் கெத்தை மலைப்பாதையில் குட்டியுடன் வந்த காட்டு யானை அரசு பேருந்தை வழிமறித்து நின்றதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
நேற்று மாலை பயணிகளுடன் மஞ்சூரில் இருந்து கெத்தை மலைப்பாதை வழியாக கோவைக்கு சென்ற பேருந்தை யானை வழிமறித்ததால், அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
யானைகள் வனப்பகுதிக்குள் சென்றபின் வாகனங்கள் வழக்கம் போல் இயங்கின.