மாணவர்களுக்கு தமிழ் மொழியில் மருத்துவப் பாடத்தை கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, தமிழகத்தின் மீது பிரதமர் மோடி கூடுதல் கவனம் செலுத்துவதாகவும், மாநிலத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களை அவர் கூர்ந்து கவனித்து வருவதாகவும் கூறினார்.