காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீரில் தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்..
டிரைவராக பணிபுரிந்து வந்த லட்சுமிபதி என்பவர், இரவு பணி முடிந்து அதிகாலை 5 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
மலையம்பாக்கம் செல்லும் சாலையில் நடந்துச் சென்ற லட்சுமிபதி, நிலைதடுமாறி மழைநீர் தேங்கியிருந்த 3 அடி ஆழ பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விழுந்ததில், எழுந்திருக்க முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
காலையில் அவ்வழியாக சென்ற மக்கள் கொடுத்த தகவலின் பேரில், லட்சுமிபதி சடலத்தை போலீசார் மீட்டனர்.
அங்கு தடுப்புகள் ஏதும் அமைக்கப்படாததே விபத்துக்கான காரணம் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
லட்சுமிபதி மதுபோதையில் நிலைதடுமாறி விழுந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் உண்மை தெரிய வருமென போலீசார் தெரிவிக்கின்றனர்.