சி.பி.ஐ தன் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாக பரவும் தகவல் வதந்தி என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், சர்வதேச சிலை கடத்தல் மன்னனான சுபாஷ் கபூர் மற்றும் தீன தயாளனை தப்பவைக்க முயன்றதாக தன் மீது குற்றம் சுமத்துவது அபத்தமானது என்று கூறியுள்ளார்.
58 ஆண்டுகள் கழித்து சிலை கடத்தல் மன்னனை நான் தான் கைது செய்தேன். ஆனால், தீனதயாளனை தான் தப்ப வைத்ததாக கூறுவது அபத்தம் என்றார். டிஎஸ்பி காதர் பாட்ஷா வழக்கில் தான் விசாரணை அதிகாரியோ, கண்காணிப்பு அதிகாரியோ இல்லை எனவும் விசாரணை அதிகாரி அசோக் நடராஜன் டிஎஸ்பி, எனவும் தனக்கு மேலே அப்போது அதிகாரியாக இருந்தவர் டிஜிபி பிரதீப் பி பிலிப் இருந்ததாகவும், இந்த வழக்கை விசாரிப்பதாக இருந்தால், அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி பிரதீப் வி பிலிப்பையும் சிபிஐ விசாரிக்கட்டும் என்றார்.
துப்பாக்கி முனையில் சிலை கடத்திய டிஎஸ்பி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்தது அப்போதைய டிஜிபிக்கு பிடிக்கவில்லை எனவும், அப்போதைய டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தகவலுக்காக, எப்படி எப்.ஐ.ஆர் போட்டிங்கன்னு கேட்டவரிடம் பேனாவால் தான் போட்டேன் என சொன்னேன் என பொன் மாணிக்கவேல் கூறினார்.
சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை யாரால் நடந்தது? என கேள்வி எழுப்பிய அவர், ஜெர்மனியில் இருந்து சுபாஷ் கபூரை கொண்டு வந்து நான்கு வழக்குகளை அவர் மீது பதிவு செய்தது தான் அதிகாரியாக இருக்கும்போது தான் என கூறினார்.