திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோவில்களுக்கு வருபவர்கள் நாகரிகமான உடைகள் அணியாமல், டி-ஷர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்தனர்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் சத்திரமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தடையை மீறி செல்போன் பயன்படுத்தினால், அதை பறிமுதல் செய்து, மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.
இதுதொடர்பான சுற்றறிக்கையை அறநிலையத்துறை ஆணையர் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை