தமிழகம் முழுவதும் ரிசர்வ் வங்கி அனுமதியின்றி செயல்பட்டுவந்த போலி வங்கிகள் முடக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சைபர் குற்றங்கள் குறித்த 'முத்துவும் 30 திருடர்களும்' என்ற விழிப்புணர்வு புத்தகத்தை வெளியிட்டு, சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் அதிகாரிகளை, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஊரக மற்றும் வேளாண் விவசாயிகள் கூட்டுறவு வங்கி பெயரில், ஒரு வருடமாக போலியான வங்கி ஒன்றை தமிழகத்தில் கிளைகள் பரப்பி சட்டவிரோதமாக நடத்தி வந்த கும்பலை கண்டுபிடித்து கைது செய்துள்ளதாக கூறினார்.