திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கேபிள் டிவி ஆபரேட்டரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெருஞ்சலக்குடியைச் சேர்ந்த கேபிள் டிவி ஆபரேட்டரான மாதவன் என்பவர் அங்குள்ள மாரியம்மன் கோவில் கமிட்டியின் பொருளாளராகவும் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த கோவிலுக்கு சொந்தமான ஏழரை சென்ட் இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த மதி என்பவர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிகாலை நடை பயிற்சி சென்ற மாதவனை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர்.
விசாரணையில் கோயில் இடத்தை ஆக்கிரமித்த நபர்களால் தாக்குதல் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.