இந்தி திணிப்பு எங்கும் இருக்கக் கூடாது என்பதே பிரதமரின் விருப்பம் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை சம்பவத்தை பாஜக கையிலெடுத்ததால்தான், உண்மைகள் வெளிவந்ததாக கூறினார்.
இந்தி திணிப்பு நடைபெறுவதாக கூறும் அமைச்சர் பொன்முடி சுய பரிசோதனை செய்ய வேண்டும் இந்தி மொழியை திணிக்ககூடாது என்பது தான் பிரதமரின் விருப்பம். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 24ஆம் தேதி நான் மனிதவெடி குண்டு தாக்குதல் என்றேன், குண்டுவெடித்து 54மணி நேரம் கழித்து தான் பயங்கரவாத தாக்குதல் என கூறுகிறார்கள். ஆர்எஸ்பாரதி பாஜகவிற்கு நன்றி சொல்ல வேண்டும், பாஜக தான் வெடிகுண்டு சம்பவத்தை வெளிக்கொண்டுவந்தது. குண்டுவெடிப்பு சம்பவத்தை மறைத்தது திமுக தான், பாஜக வெளிப்படுத்தாவிட்டால் சிலிண்டர் குண்டுவெடிப்பில் இறந்த முபின் குடும்பத்திற்கு அரசு வேலையே திமுக அரசு கொடுத்திருக்கும்.
தமிழகத்தில் இளைஞர்களிடையே மது - கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அண்ணாமலை, காவல்துறையில் சீர்திருத்தம் தேவை என்றும் வலியுறுத்தினார்.